அம்பாறை மாவட்டம் காரைதீவு உதவி பிரதேச செயலாளர் எஸ். பார்த்தீபன் தலைமையில் பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான சந்தைப்படுத்தல் தொடர்பான இரண்டாவது நாள் பயிற்சி லேடி லங்கா மண்டம், காரைதீவில் இடம்பெற்றது.
மக்களின் தேவைகள் பொருளாதாரம், வாழ்வாதாரம், இனி வரும் நாட்கள், என பல்வேறுபட்ட பொருளாதார சிக்கல்கள் தொழில் முயற்ச்சியாளர்கள் எப்படி திட்டமிடல் வேண்டும் எனப் பலவிடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
கிறிசலிஸ் நிறுவன திட்ட இணைப்பாளர் பாஸ்கரன், உதவி கள உத்தியோகத்தர் பி.தசரதா போன்றோரின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெனிதா மோகன் மற்றும் மகளிர் அபிவிருத்தி வெளிக்கள உதவியாளர் திருமதி. எம்.எஸ். றசீனா போன்றோரும் கலந்துகொண்டனர். பயிற்சி நிபுணர் திரு.ஏ.அரியசுதன் என்பவரால் பயிற்சி வழங்கப்பட்டது.