காரைதீவில் யோகாசன கற்கைநெறி தொடர்பான விழிப்பூட்டல்

0
186

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் காரைதீவு பிரதேச செயலகத்தில் யோகாசனம் அடிப்படைச் சான்றிதழ்க் கற்கைநெறி தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வு இடம்பெற்றது.

காரைதீவு பிரதேசசெயலாளர் சி.ஜெகராஜன் தலைமையில் இன்று இடம் பெற்ற நிகழ்வில்
வளவாளராக திரு எஸ்.குமாரதாசன் கலந்துகொண்டு பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான தெளிவுபடுத்தல்களை வழங்கினார்.

இதற்கான ஏற்பாடுகளை மாவட்டசெயலக இந்து கலாசார உத்தியோகத்தர் திரு கு.ஜெயராஜி மேற்கொண்டார்

இந்து சமய கலாசாரக் கற்கைகள் நிறுவகம் சுவாமி விபுலானந்தர் பயிற்சி நிலையம், காரைதீவு , அம்பாறை மாவட்டத்தினூடாக இவ்விழிப்பூட்டல் நிகழ்வுகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.