காரைதீவு பிரதேச சிறுவர் மற்றும்
பெண்கள் அபிவிருத்திக்குழுக் கூட்டம்

0
264

காரைதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட இடங்களில் காணப்படும் சிறுவர் மற்றும் பெண்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்து அவர்களின் நலனை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ‘பிரதேச சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்திக்குழுக் கூட்டம். காரைதீவுப் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் தலைமையில் பிரதேச கேட்போர் கூடத்தில் இன்று இடம் பெற்றது.

பிரதேச செயலக சிறுவர் பெண்கள் அபிவிரித்திப்பிரிவு ஏற்பாடு செய்திருந்த குறித்த குழுவின் வருடத்திற்குரிய இரண்டாவது கூட்டம் இன்று இடம் பெற்றதுடன் பிரதேச சிறுவர் பெண்கள் எதிர் நோக்கும் மாறுபட்ட பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

கலந்துரையாடலில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய வைத்தியர் தஸ்லிமா பஸீர், உதவிப் பிரதேச செயலாளர் ,பிரதேசசபை செயலாளர், கிராம மதுவரித்திணைக்களம், சிறுவர் நன்னனடத்தைத் திணைக்களம் ,தொழில் அலுவலக உத்தியோகஸ்தர்கள் கலந்து கொண்டார்கள்.

;