காரைதீவு பிரதேசத்தில் சமுர்த்தி
வீடுகளுக்கான அடிக்கல் நாட்டல்

0
157

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினுடைய 2022ஆம் ஆண்டிற்கான சௌபாக்கியா வீட்டுத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டம் காரைதீவில் சமுர்த்தி வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

காரைதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட
சமூர்த்திப் பயனாளிகளுக்கு 6,50,000 ஆயிரம் பெறுமதியான வீடுகள் வழங்கும் நிகழ்வுகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

கரடித்தோட்ட வங்கி முகாமையாளர் ஏ.பர்;சான் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் பிரதம அதிதியாக்கலந்து கொண்டதுடன் காரைதீவு பிரதேச செயலகத்தின் சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எச்.எம்.அச்சிமுகம்மட் காரைதீவு சமூர்த்திவங்கி முகாமையாளர் எஸ்.எஸ்.சதீஸ், கருத்திட்ட முகாமையாளர் எம்.விஜயமோகன் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் கலந்து கொண்டனர்.