வல்வெட்டித்துறையில் காவல்துறையின் உத்தரவை மீறிச் சென்ற பாரவூர்தி மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். மணல் கொண்டு செல்லும் போர்வையில் கஞ்சா கடத்திச் சென்ற குற்றச்சாட்டிலே பாரவூர்தி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவத்தில் காயமடைந்த சந்தேக நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.