கிணற்றில் விழுந்து இருவர் உயிரிழப்பு!

0
20

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையில் கிணற்றில் தவறி விழுந்து 3 வயது குழந்தையும் தாய் மாமனும் உயிரிழந்துள்ளனர்.

வட்டுக்கோட்டை – சங்கரத்தை – திக்கிராய் குளத்தின் அருகிலுள்ள கிணற்றிலேயே இருவரும் வீழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசுவமடு – ரெட்பானாவை சேர்ந்த 03 வயது ஆண் குழந்தையும் அவரின் தாய் மாமனான வட்டுக்கோட்டை தெற்கைச் சேர்ந்த நபரும் உயிரிழந்தனர்.

கிணற்றில் குழந்தை மிதப்பதை அவதானித்த அந்தப் பகுதியினர் குழந்தையை மீட்டு யாழ். போதனா மருத்துவமனையில் சேர்ப்பித்தனர்.

எனினும், குழந்தை உயிரிழந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் கிணற்றிலிருந்து குழந்தையின் தாய் மாமனை மீட்டு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்து விட்டார் என தெரிவிக்கப்பட்டது.

இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.