கித்துள் எல்ல நீர்வீழ்ச்சியில் விழுந்து ஜேர்மன் பிரஜை மரணம்

0
122

பதுளை எல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கித்துள் எல்ல நீர்வீழ்ச்சியை பார்வையிடுவதற்காக சென்ற வெளிநாட்டு பிரஜையொருவர் நீர்வீழ்ச்சியில் விழுந்து உயிரிழந்துள்ளார் என்று எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

ஜேர்மன் நாட்டை சேர்ந்த 33 வயது நபரே மரணமடைந்தார்.

பிரேதப் பரிசோதனைக்காக பதுளை வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில்இ எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.