ஐ.நா பெண்கள் அமைப்பு அனுசரணையுடன் ஜப்பான் மக்களின் நிதிப் பங்களிப்புடன் ‘கிரிசாலிஸ்’ நிறுவனத்தினால் பெண்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தல் மற்றும் முயற்சியாண்மையை மேம்படுத்தல் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வீட்டுத் தோட்ட உபகரணங்களும், பசளைகளும் 200குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.
காரைதீவு பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் எஸ்.பார்த்திபன்,உதவித்திட்டமிடல் பணிப்பாளர் பி.ராஜகுலேந்திரன், ‘கிரிசாலிஸ்’ நிறுவன உத்தியோகஸ்தர்கள், மகளீர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.
; தற்கால பொருளாதார நெருக்கடியிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக ஒவ்வொரு வீட்டிலும் தமக்கு தேவையானதை தாமே உற்பத்தி செய்வதே இதன் நோக்கமாக கருதப்படுகின்றது