கிளிநொச்சி கரியாலை நாகபடுவான் அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. குறித்த கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வானது பாடசாலை அதிபர் ப. சசிகரன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது 71 மாணவர்களுக்கான பாடசாலை கற்றல் உபகரணங்கள் மற்றும் பாதணிகள் இணைந்த கரங்கள் அமைப்பின் உறுப்பினர்களால் வழங்கப்பட்டன. நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள் இணைந்த கரங்கள் அமைப்பினர் கலந்துகொண்டனர்.