கிளிநொச்சி மாவட்ட விவசாய ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

0
133

கிளிநொச்சி மாவட்டத்தின், மாவட்ட விவசாய ஒருங்கிணைப்பு குழு கூட்டம், இன்று, அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தின், 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான பெரும் போக பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், குறித்த கலந்துரையாடல், மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில், மாவட்ட செயலக மாநாடு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன் போது, பெரும் போகத்திற்கான உர மானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றமை தொடர்பிலும், தேசிய உணவு உற்பத்திக்கு பங்களிப்புச் செலுத்தும் வகையிலும், பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாகவும், ஏனைய பல விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளன. இதில், துறை சார்ந்த திணைக்கள தலைவர்கள், பதவி நிலை உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.