கிளிநொச்சி விவசாயிகள், நெல் உலர விடும் தளம் இன்மையால் பாதிப்பு

0
193

வடக்கு மாகாணத்தில், பெருமளவு நெற் செய்கை மேற்கொள்ளப்படும் விவசாய மாவட்டமாக, கிளிநொச்சி மாவட்டம் காணப்பட்டாலும், வெற்றிகரமான விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, போதிய வசதிகள் இன்மையால், விவசாயிகள், தொடர்ந்தும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
விவசாயிகளுக்கு போதிய பசளை இன்மை, விளைச்சல் குறைவு ஒருபுறம் இருக்க, விவசாயிகள், தற்போது அறுவடை செய்கின்ற நெல்லை, உலர விடுவதற்கு போதிய தளம் இன்மையால், நெல்லை வீதியில் உலர விட்டு, மழையில் நனைய விட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அந்தவகையில், கிளிநொச்சி டி5 கமக்காரர் அமைப்பினால், ஆயிரத்து 500 க்கு மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில், சிறுபோக நெற் செய்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், விவசாயிகள், அறுவடை செய்கின்ற நெல்லை, பரந்தன் – பூநகரி வீதியில் உலர விடுகின்றனர்.
இதனால், தமக்கு போதிய அளவு நெல் உலர விடும் தளத்தை அமைத்து தருமாறும், கோரிக்கை விடுத்துள்ளனர்.