கிளிநொச்சியில் 5ஆவது இலவச மருத்துவ முகாம்!

0
120

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் 2016 ம் ஆண்டு உயர்தர மாணவர்கள் வித்தியாலயத்தின் விழுதுகள் 2016 அமைப்பின் ஏற்பாட்டில் கிளிநொச்சி வன்னேரிக்குளம் யோகசுவாமிகள் திருவடி நிலைய முதியோர் இல்லத்தில் இலவச மருத்துவ முகாம் இடம்பெற்றது.

இலவச மருத்து முகாமில் முதியோர் இல்ல முதியோர்கள் மற்றும் பிரதேச வாழ் மக்கள் உட்பட 313 பேர் கலந்து கொண்டு சிகிச்சைகளைப் பெற்றுக் கொண்டனர்.

இதன்போது கண்கள் பரிசோதிக்கப்பட்டு 39 பேருக்கு மூக்கு கண்ணாடிகளும் வழங்கி வைக்கப்பட்டது.

இலவச மருத்துவ முகாமில் கண் சிகிச்சை, பற் சிகிச்சை, வெளி நோயாளர் பிரிவு, பெண்களுக்கான கருப்பை கழுத்துப் பரிசோதனை, மார்பக புற்றுநோய் பரிசோதனை, மந்த போசணையுடைய குழந்தைகளுக்கான சிகிச்சைகள், ஆலோசனைகள், மலேரியா இரத்த பரிசோதனை, உளநல ஆலோசனைகள், சட்ட ஆலோசனைகள் என்பன இடம்பெற்றன.

இலவச மருத்துவ முகாமில் கிளிநொச்சி பிராந்திய சுகாதார பணிமனையினர், கிளிநொச்சி மற்றும் அக்கராயன் வைத்தியசாலை மருத்துவர்கள், தாதியர்கள், மருந்தாளர்கள், மருத்துவ மாதுக்கள் என மருத்துவ குழாமினர் பூரண பங்காற்றியிருந்தனர்.