கிளிநொச்சியில் இடம்பெற்ற மாவட்ட விசேட அபிவிருத்திக்குழு கூட்டம்!

0
91

கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று முற்பகல் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

கடற்றொழில் அமைச்சரும் யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கூட்டம் நடைபெற்றது.முன்னதாக நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களில் பிரஸ்தாபிக்கப்பட்ட விடயங்களின் முன்னேற்றம் தொடர்பில் இன்றைய கூட்டத்தின்போது கலந்துரையாடப்பட்டது.

பொதுச்சந்தையில் குறிப்பிட்ட சில வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், கமக்கார அமைப்புக்களுக்கிடையிலான பிரச்சினைகள் போன்றவை தொடர்பிலும் இன்றைய கூட்டத்தின்போது கலந்துரையாடப்பட்டது.

இன்றைய கூட்டத்தில் கடற்றொழில் அமைசச்ர் டக்ளஸ் தேவானந்தா, மாவட்ட பதில் அரச அதிபர் எஸ். முரளிதரன், மாவடட் திணைக்களங்களின் தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.