கிளிநொச்சியில் மரதனோட்ட நிகழ்வு

0
193

போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பசுமை திட்டத்திற்கான நிதி சேகரிப்பிற்காக, கிளிநொச்சி பீப்பிலின் எடின்புரோ மரதன் நிகழ்வு இடம்பெற்று வருகிறது.
அதற்கு ஆதரவாக வலுச் சேர்க்கும் வகையிலும், கிளிநொச்சியில் பரந்தன் சந்தியில் இருந்து கிளிநொச்சி பசுமை பூங்கா வரை அடையாள மரதன் ஒட்ட நிகழ்வு இன்று இடம்பெற்றது.

மரதனோட்;ட நிகழ்வை, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் ஆரம்பித்து வைத்தார்.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பெறுமதி மிக்க பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.