கிளிநொச்சியில், வெடி பொருட்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

0
133

வெடி பொருட்கள் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் செயற்பாட்டு உதவிகளுக்கான சர்வதேச தினம் நிகழ்வு, கிளிநொச்சியில் இடம்பெற்றது.

யுத்த காலங்களில், இலங்கை இராணுவம் மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளினால், கண்ணிவெடிகள் போன்ற வெடிபொருட்கள் புதைக்கப்பட்டன.

இருப்பினும், யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர், யுத்தம் இடம்பெற்ற இடங்களில், மக்களை மீள்குடியேற்ற வேண்டிய காரணத்தினால், கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், 2009 ஆண்டுக்கு பின்னர், கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, சுமார் 15 வருடங்களாக இடம்பெற்று வருகின்றது.

அதனடிப்படையில், இன்று, கிளிநொச்சி மகா வித்தியாலய மைதானத்தில், வெடி பொருட்கள் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் செயற்பாட்டு உதவிகளுக்கான சர்வதேச தின நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

சர்வதேச தினத்தை முன்னிட்டு, வடக்கு மாகாணத்தில், டாஸ், கலோ ரெஸ்ட், ஷாப், எம்.ஐ ஆகிய நிறுவனங்கள், கண்ணிவெடி அகற்றும் பணிகளை முன்னெடுத்து வருகின்றன.

இந்த நிலையில், இந்த நிறுவனங்களின் அணிகளுக்கு இடையில், மென்பந்து கிரிக்கெட் போட்டிகளும் நடத்தப்பட்டன.