குமார் குணரத்னம் உள்ளிட்ட 40 பேரின் மனுக்களை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி!

0
160
முன்னிலை சோஷலிசக் கட்சியின் பொதுச்செயலாளர், குமார் குணரத்னம் உள்ளிட்ட 40 பேர் தாக்கல் செய்த, மூன்று அடிப்படை உரிமை மனுக்களை விசாரிக்க, உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.அமெரிக்காவில், கறுப்பின மக்கள் துன்புறுத்தப்படுவதைக் கண்டித்து, கொழும்பில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கலந்து கொண்ட தங்களைக், கைது செய்து தடுத்து வைத்ததன் மூலம், தங்களது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக உத்தரவிடுமாறுகோரி, அவர்கள் குறித்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.இந்த மனுக்கள், நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன மற்றும் ஜனக்க டி சில்வா ஆகியோர் அடங்கிய ஆயம் முன்னிலையில் நேற்று அழைக்கப்பட்டது.இதன்போது, குறித்த மனுக்களை, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் திகதி விசாரணைக்கு அழைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.