குளிர்சாதனப் பெட்டியை திறந்தபோது மின்சாரம் தாக்கி இளம் தாய் மரணம்!

0
286

ஓட்டமாவடியில் மின்சாரம் தாக்கி இளம் தாயொருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி மூன்றாம் வட்டாரம் மஸ்ஜிதுல் ஹைர் பள்ளிவாசல் வீதியிலுள்ள வீடொன்றிலே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த வீட்டுப்பெண் குளிர்சாதனப் பெட்டியிலிருந்த பொருட்களை எடுக்க திறந்த போது குளிர்சாதனப்பெட்டியில் மின்னொழுக்கு ஏற்பட்டிருந்த காரணமாக மின்சாரம் தாக்கியதில் மரணமடைந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின்போது தெரிய வந்துள்ளது.
35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான அபூபக்கர் பஸ்மியா என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.