கெரண்டி எல்ல பேருந்து விபத்து – படுகாயமடைந்தவர்களை கொழும்புக்கு அழைத்துவர 2 உலங்குவானூர்திகள் தயார் நிலையில்

0
118

இறம்பொடை – கெரண்டி எல்ல பேருந்து விபத்தில் படுகாயமடைந்தவர்களை மேலதிக சிகிச்சைகளுக்காகக் கொழும்புக்கு அழைத்து வர இரு உலங்குவானூர்திகள் தயாராகவுள்ளன.பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் ஆலோசனையின் அடிப்படையிலேயே உலங்குவானூர்திகளைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கை விமானப்படைக்கு சொந்தமான இரண்டு, பெல் 412 உலங்குவானூர்திகள் அவசரகால மீட்புப் பணிகளுக்குத் தயாராகவுள்ளன.நேற்று வெலிமடை பகுதியிலும், இன்று காலை கொத்மலை,கெரண்டி எல்ல பகுதிகளிலும் ஏற்பட்ட பேருந்து விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்காக இந்த உலங்குவானூர்திகள் ஒதுக்கப்பட்டுள்ளன.