


யாழ். கைதடியில் இருந்து கோப்பாய்க்கு செல்லும் பிரதான வீதியில்
ஹையேஸ் வாகனம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டினை இழந்த நிலையில் அருகில் உள்ள மதகில் மோதியுள்ளது.
கோப்பாய் சந்திக்கு அருகாமையில் குறித்த வாகனம் இவ்வாறு தடம்புரண்டுள்ளதாக கோப்பாய் வீதிப்போக்குவரத்து பாதுகாப்பு பொலிஸார்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்து இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதில் ஹையேஸ் வாகன சாரதி காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.