கொட்டகலை நீர்ப்பாசன வனப்பிரதேசத்திற்கு, இனந்தெரியாதோரால் தீ வைப்பு

0
161

நுவரெலியா மாவட்டம் திம்புள்ளை பத்தனை பொலிஸ் பிரிவிக்குட்பட்ட கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் நேத்ரா பிளேஸ் பகுதிக்கு மேல் அமைந்துள்ள நீர்ப்பாசன வனப்பிரதேசத்திற்கு, இனந்தெரியாதவர்களால் வைக்கப்பட்ட தீ காரணமாக, அப்பகுதியில் 10 ஏக்கர் வரையுள்ள வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளது.

தீ காரணமாக தொலைபேசி வயர்கள்;, மின் வயர்கள் மற்றும் குடிநீரக் குழாய்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சாந்திபுரம், சமாதானபுரம், நேத்ரா பிளேஸ், கொட்டகலை, கொமர்ஷல் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடி நீர்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

வனப்பகுதிகளுக்கு தீ வைப்பவர்களை கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.