கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்த ராமேஸ்வரன் எம்.பி வீடு திரும்பினார்

0
244

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் கண்டி பேராதனை வைத்தியசாலையில் சுமார் ஒரு மாதமாக சிகிச்சை பெற்றுவந்த நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் குணமடைந்து இன்று(16) வீடு திரும்பியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீள்வதற்கு காரணமாக இருந்த வைத்தியத் துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் அவர் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.