கொழும்பு மருதானையைச் சேர்ந்த இருவர் மட்டக்களப்பில் கைது

0
143

மட்டக்களப்பு ஏறாவூரில் இருந்து காத்தான்குடிக்கு கார் ஒன்றில் மான் இறைச்சியை எடுத்துச் சென்ற கொழும்பு மருதானையைச் சேர்ந்த இருவரை மட்டக்களப்பு நகர் பகுதியில் வைத்து நேற்று மாலை கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து 6 கிலோ கிராம் மான் இறைச்சியை மீட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிசார் மற்றும் புலனாய்வு பிரிவினர் பொலிஸ் நிலையத்துக்கு முன்னாள் உள்ள வீதி சுற்றுவட்டத்துக்கு அருகில் கண்காணிப்பில் ஈடுபட்டுகொண்டிருந்த நிலையில் பொலிசார் காரை நிறுத்தி சோதனையிட்டபோது சட்டவிரோதமான முறையில் கடத்தி வரப்பட்ட மான் இறைச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.