நாட்டில் நேற்று (04) கொவிட் மரணங்கள் ஏதும் பதிவாகவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
மேலும், மே 11 ஆம் திகதி தொடக்கம் ஜூன் 03 ஆம் திகதி வரை 48 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கமைய நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,656 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கமைய,
மே 11 – 01 மரணம்
மே 13 – 01 மரணம்
மே 20 – 01 மரணம்
மே 23 – 01 மரணம்
மே 24 – 02 மரணங்கள்
மே 29 – 02 மரணங்கள்
மே 30 – 01 மரணம்
மே 31 – 16 மரணங்கள்
ஜூன் 01 – 12 மரணங்கள்
ஜூன் 02 – 09 மரணங்கள்
ஜூன் 03 – 02 மரணங்கள்
உயிரிழந்தவர்கள் தொடர்பான விபரம்
• பால்
பெண்கள் – 23
ஆண்கள் – 25
• வதிவிடப் பிரதேசம்
பொகவந்தலாவை, மஸ்கெலியா, முதுங்கொடை, கொழும்பு-13, கொலன்னாவை, களுத்துறை வடக்கு, மத்துகம, கிரிமெட்டிய, கண்டி, நாவான, ரதாவன, இராஜகிரிய, கொழும்பு-10, திஹாரிய, அத்தனகல்ல, வெலிஓயா, றாகம, யட்டவத்த, ஜல்தர, நுவரெலியா, கல்பாத்த, துன்மோதர, பஸ்யாலை, கல்கமுவ, மெகொடவேவ, கல்னேவ, ஹொருவில, அவிசாவளை, புப்புரஸ்ஸ, தோரயாய, மெல்சிரிபுர, அவ்லேகம, குருநாகல், இந்துல்கொடகந்த, நாரம்மல, பொல்கஹவல, மெரகொல்லாகம, அலவ்வ, பண்டாரகொஸ்வத்த, பதுள்ள, ஹங்குரன்கெத்த, பயாகல, பேருவளை மற்றும் கிரிமெட்டியாவ
• அவர்களின் வயதெல்லை
வயது 20 இற்கு கீழ் – 00
வயது 20 – 29 – 00
வயது 30 – 39 – 01
வயது 40 – 49 – 01
வயது 50 – 59 – 09
வயது 60 – 69 – 16
வயது 70 – 79 – 07
வயது 80 – 89 – 12
வயது 90 – 99 – 02
வயது 99 இற்கு மேல் – 00
• உயிரிழந்த இடங்கள்
வீட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை – 18
வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்தவர்கள் – 01
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தவர்கள் – 29
• உயிரிழந்தமைக்கான காரணங்கள்
கொவிட் தொற்றுடன் தீவிர கொவிட் 19 நிமோனியா, ஈரல் நோய், இதயம் செயலிழந்தமை, கொவிட் 19 நுரையீரல் தொற்று, இதய நோய், நுரையீரல் அழற்சி, உயர் குருதியழுத்தம், மூச்சிழுப்பு, சுவாசத்தொகுதி செயலிழப்பு, பல தொகுதி நோய், கட்டுபாடற்ற நீரிழிவு, சுவாசக்கோளாறு, மோசமாக சிறுநீரகம் செயலிழந்தமை, புற்றுநோய், குருதி நஞ்சானமை மற்றும் பல உறுப்புக்கள் செயலிழந்தமை போன்ற நிலைமைகள்.