கோட்டைக்கல்லாறில் சமுர்த்தி சமுதாய மட்ட அடிப்படைக்குழுக்களுக்கு கருத்தரங்கு

0
126

மட்டக்களப்பு மண்முனை தென் எருவில்பற்று பிரதேசத்திற்குட்பட்ட கோட்டைக்கல்லாறு கிராமத்தில் இயங்கிவரும் சமுர்த்தி சமுதாய மட்ட அடிப்படைக்குழுக்களுக்கான கருத்தரங்கு பிரதேச சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் க.உதயகுமார் தலைமையில் கோட்டைக்கல்லாற்றில் இன்று நடைபெற்றது.

சமுர்த்தி பணக்கொடுப்பனவு அதிகரிப்பு, எதிர்கால கடன் அதன் வட்டிவீதம், மற்றும் பலவிதமான சுயதொழில் ஊக்குவிப்புகடன் வழங்கல் தொடர்பான விடயங்கள் பற்றி தெளிவுபடுத்தப்பட்டடது.

பெரியகல்லாறு சமுர்த்தி வங்கி முகாமையாளர் சீ.ரவிந்திரன், வெல்லாவெளி சமுர்த்தி முகாமையாளர் ஏ.தனேந்திரராஜா ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டதுடன் பிரதேச சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுதாயக்குழுக்களின் உறுப்பினர்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.