சமத்துவமின்மை முரண்பாடுகளை
உருவாக்கியுள்ளது

0
148

அம்பாறை மாவட்டம், கிழக்கு மாகாணம், கல்முனை வடக்குச் செயலகத்தில் உள்ள சிவில் நிர்வாகம், 3 தசாப்தங்களாக தமிழ்ச் சமூகங்களுக்குத் தீர்வின்றி, சமத்துவமின்மை மற்றும் முரண்பாடுகளை உருவாக்கியதாக அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே. கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் இடம் பெற்ற 51 வது கூட்டத்தொடரில் கலந்து கொண்டதுடன் தனது ஒன்றரை நிமிட உரையின் போது தெரிவித்தார்.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது என தீர்மானத்தின் கீழ் கருத்துரைத்தார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே. கோடீஸ்வரன். முழு தீவின் மனித உரிமைகள் ஐக்கிய நாடுகளாலும் இந்த சபையாலும் பேசப்பட வேண்டும் என்பதை தமிழ் மக்கள் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், இனப்படுகொலைக்கான சர்வதேச பொறுப்புக்கூறலானது சபைக்கு வெளியே இலங்கையில் அல்லது ஒரு ஓரத்தில் அது நடக்கக்கூடாது.
மேலும், இலங்கை அரசு தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை புறக்கணிக்கிறது. உதாரணமாக அம்பாறை மாவட்டம், கிழக்கு மாகாணம், கல்முனை வடக்குச் செயலகத்தில் உள்ள சிவில் நிர்வாகம், 3 தசாப்தங்களாக தமிழ்ச் சமூகங்களுக்குத் தீர்வின்றி, சமத்துவமின்மை மற்றும் முரண்பாடுகளை உருவாக்கியது. இந்தப் பிரச்சினையை ஐ.நா.மாநாட்டில் பதிவு செய்கிறேன். பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் தாயகத்தில் கட்டமைப்பு ரீதியான இனப்படுகொலையை எதிர்கொள்கின்றனர். மனித உரிமைகள் பேரவையின் தீர்மான செயல்முறையானது சர்வதேச குற்றங்களின், குறிப்பாக இனப்படுகொலை குற்றங்களின் பொறுப்புக்கூறலில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.