சர்வதேச மனித உரிமை தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது

0
159

விசேட தேவையுடைய அனைத்து பெண்கள்களுக்கும் ஒரு சமத்துவமான மற்றும் கௌரவம் மிக்க வாழ்வை உறுதிப்படுத்துவோம் ‘ எனும் தொனிப்பொருளில் சர்வதேச மனித உரிமை தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது

மட்டக்களப்பு விசேடதேவையுடைய பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகர் காந்திபூங்கா முன்பாக முன்னெடுக்கப்பட்ட அமைதிவழி கவனஈர்ப்பு போராட்டத்தில் விசேட தேவையுடைய பெண்களுக்கான உரிமைக்காக எழுந்திடுவோம் எனும் ஐந்து அம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு சர்வதேச மனித உரிமை தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது .

இதன்போது தமது கோரிக்கைளை முன்வைத்து முன்னெடுக்கப்பட்ட அமைதிவழி கவனஈர்ப்பு போராட்டத்தின் போது மட்டக்களப்பு விசேடதேவையுடைய பெண்கள் வலையமைப்பின் உறுப்பினர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்