சர்வதேச மாற்றுத்திறனாளிகள் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு கவனயீர்ப்புப் போராட்டம்

0
130

அம்பாறை சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்கு முன்பாக, சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு
கவனயீர்ப்புப் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.
சாய்ந்தமருது விசேட தேவையுடையோர் மகா சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தங்களுக்கான மாதாந்த கொடுப்பனவை முறையாக வழங்க வேண்டும், மாதாந்த கொடுப்பனவை அதிகரிக்க வேண்டும்.
சுகாதார மற்றும் புனர்வாழ்வு உதவிகளையும் செய்ய வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளும் கவனயீர்ப்புப் போராட்டத்தின் போது முன்வைக்கப்பட்டது.