சாதனை படைத்த பெண்கள் மட்டக்களப்பில் கௌரவிப்பு

0
204

விஞ்ஞானத்துறையில் 13 தங்கப் பதக்கங்களைப் பெற்றுக்கொண்ட கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த தர்ஷிகா மற்றும் பாகிஸ்தானில் இடம்பெற்ற சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் பங்குகொண்டு தங்கப்பதக்கம் வென்ற வடமாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனை கணேஷ் இந்துகாதேவி ஆகியோரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது.

விழித்தெழு பெண்ணே சர்வதேச கனடா மகளிர் அமைப்பின் தலைவி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அதிதிகளாக மேலதிக அரசாங்க அதிபர் காணி நவருபரஞ்சனி முகுந்தன், மாவட்டச் செயலக பிரதம கணக்காளர் இந்திராவதி மோகன், மற்றும் மட்டக்களப்பு வர்த்தக சங்க உறுப்பினர்கள், கலந்து கொண்டு சாதனை படைத்த பெண்கள் இருவருக்கும் நினைவு பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.

இந்நிகழ்வில் சாதனைபடைத்த யுவதிகளின் குடும்ப உறவினர்கள் சமூக ஆர்வளர்கள், ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.