கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்தின் சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி நிகழ்வில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை கண்டித்து, இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நேற்றையதினம் நடைபெற்ற வருடாந்த விளையாட்டுப்போட்டியில், வன்முறைக் கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தி, விளையாட்டுப் போட்டியை குழப்ப முற்பட்டது.
வன்முறைக்கும்பலின் தாக்குதல் காரணமாக ஐவர் காயமடைந்துள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டனர்.
குறித்த சம்பவத்தில் காயமடைந்த மாணவி அடங்கலாக ஐவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்து, இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கிராம மட்ட அமைப்புகள், பெற்றோர் இணைந்து ஏற்பாடு செய்த போராட்டத்தில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு தங்களின் எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.








