சித்திரப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு

0
672

கறிராஸ் வாழ்வுதயம் நிறுவனத்தின் சூழல் பாதுகாப்பு பிரிவினர் தமது இலக்கு கிராமங்களுக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்கள் மத்தியில் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் தரம் 01 தொடக்கம் 12 வரையிலான மாணவ மாணவிகளை நான்கு பிரிவுகளாக உட்படுத்தி ‘சூழலைப் பாதுகாப்பதில் மாணவர்களின் பங்களிப்பு’ எனும் தலைப்பில் சித்திரப்போட்டி இடம்பெற்றது.

வேப்பங்குளம் முஸ்லிம் மகா வித்தியாலயம், வட்டக்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, கட்டையடம்பன் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை ஆகியவற்றில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு குறித்த போட்டி இடம்பெற்றது.

மன்னார் சித்திர ஆசிரியர் பெஞ்சமின் பெலிக்ஸ், வாழ்வுதய இயக்குனர் அருட்பணி அன்ரன் அடிகளார், திட்டத்தின் இணைப்பாளர் யேசுதாசன் ஆகியோர் ஒவ்வொரு பிரிவிலும் இருந்து சிறந்த முதல் மூன்று வெற்றியாளர்களை தெரிவுசெய்தனர்.

அந்தவகையில் தெரிவுசெய்யப்பட்ட 12 வெற்றியாளர்களை கௌரவித்து பரிசளிக்கும் நிகழ்வு நேற்று மன்னார் வேப்பங்குளம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இதன்போது கறிராஸ் வாழ்வுதய இயக்குனர் அருட்பணி அன்ரன் அடிகளார், பாடசாலை சமூகத்தினரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.