29 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

சுகாதார அமைச்சிற்குள் உள்ள முரண்பாடுகளை ஆராய கோப் இரண்டு உப குழுக்களை நியமித்தது

பொதுக் கணக்குகளுக்கான குழு, சுகாதார அமைச்சிற்குள் காணப்படும் முரண்பாடுகளைக் கண்டறிய இரண்டு உப குழுக்களை நியமித்துள்ளது.லசந்த அழகியவன்ன தலைமையில் கூடிய போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.மருந்துப் பற்றாக்குறை மற்றும் கொள்வனவுகள் தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரைகளை சமர்பிப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தலைமையில் உப குழுவொன்று நியமிக்கப்பட்டது.இந்த குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்களான டயானா கமகே, அசோக் அபேசிங்க, ஜயந்த கெட்டகொட மற்றும் ஹரினி அமரசூரிய ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.பாராளுமன்ற உறுப்பினர் பிரதீப் உந்துகொட தலைமையிலான ஏனைய குழுவில், பாராளுமன்ற உறுப்பினர்களான இசுரு தொடங்கொட, விமலவீர திஸாநாயக்க, மஞ்சுள திஸாநாயக்க, வீரசுமண வீரசிங்க மற்றும் முதித பிரிஷாந்தி ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
கோபாவின் எந்தவொரு உறுப்பினரும் இரண்டு உப குழுக்களிலும் இணைய முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.இச்சந்திப்பின் போது சுகாதார அமைச்சின் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.COPA உறுப்பினர்கள், அங்கு வந்திருந்த சுகாதார அமைச்சின் அதிகாரிகள் அளித்த பதில்களில் திருப்தி அடையவில்லை என தெரிவித்தனர்.சுகாதார அமைச்சின் தரவு அமைப்பு குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles