சுகாதாரம், ஊடக பிரதி அமைச்சரை சந்தித்தார் பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர்

0
12

பிம்ஸ்டெக் (BIMSTEC) அமைப்பின் பொதுச் செயலாளர் தூதர் இந்திரா மணி பாண்டே, சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத் பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சகா விஜேமுனி ஆகியோர் இடையிலான முக்கிய சந்திப்பு சுகாதார அமைச்சில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது, BIMSTEC உடன் இணைந்து செயல்படும் சுகாதாரம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்ட முக்கிய பிராந்திய ஒத்துழைப்பு துறைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், இலங்கையின் இலவச சுகாதார அமைப்பை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்க துறைகளில் அரசாங்கம் எடுக்கும் புது முயற்சிகளை பொதுச் செயலாளர் பாராட்டினார்.

மேலும், மேற்கத்திய மற்றும் உள்நாட்டு மருத்துவம் ஆகிய துறைகளை மேம்படுத்தும் நோக்கில் BIMSTEC மற்றும் இலங்கைக்கு இடையிலான எதிர்கால ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

சந்திப்பு முடிவில், BIMSTEC முயற்சிகளில் அளிக்கும் ஒத்துழைப்புக்கு பொதுச் செயலாளர் தூதர் இந்திரா மணி பாண்டே மற்றும் அவரது குழுவினருக்கு அமைச்சர் டாக்டர் ஹன்சகா விஜேமுனி தனது நன்றிகளை தெரிவித்தார்.

பிம்ஸ்டெக் BIMSTEC குழுவில் 7 நாடுகள் அடங்கும் அவை பங்களாதேஷ், இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து, பூட்டான் மற்றும் நேபாளம் ஆகும்.