செல்வச்சந்நிதி ஆலய முன்றலில் இன்று மாலை திருப்புகழ் பாமாலை சொற்பொழிவு இடம்பெறவுள்ளது!

0
270

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய முன்றலில் இன்று மாலை 4.00 மணிக்கு திருப்புகழ் பாமாலையும் சிறப்பு சொற்பொழிவும் இடம்பெறவுள்ளது.


இந்தியா ஆறுபடை வீடுகளில் ஒன்றாக பழனி முருகன் கோவில் .அக்கோயிலிருந்து வருகை தந்துள்ள ஓதுவார் திருமுறை இசைச் செல்வர் விக்னேஷ் ஆறுமுகம் அவர்களினால் இன்று செல்வச்சந்நிதியில் மாலை 4 மணிக்கு சந்நிதி ஆலய அரங்கில் திருப்புகழ் இசை கச்சேரி இடம்பெறவுள்ளது. சொற்பொழிவாளர் செந்தமிழ்ச் சொல்லருவி திரு. ச. லலீசன் அவர்களுடன் சொற்பொழிவாளரும் வசந்தம் F.m வானொலி புகழ் நேர்முக வர்ணனையாளர் திரு தங்கராசா தவனேசன் கலந்துசிறப்பிக்கவுள்ளனர்.
கலாவித்தகர் பத்மநாதன் ஷியாம்கிருஷ்ணன் அவர்களும் குழுவினர்களும் பக்கவாத்தியப் இசைப்பார்கள்.
எம்பெருமானின் அருள் ஆசியுடன் இடம்பெறும் இந் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அனைவரையும் அழைக்கின்றோம்.