சைக்கிளில் பயணித்த மாணவனை மோதித்தள்ளிய பேருந்து!

0
200

வவுனியா பத்தினியார் மகிழங்குளம் பகுதியில் பாடசாலைக்கு சென்ற மாணவனை பேருந்து மோதியதில் மாணவன் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பத்தினியார் மகிழங்குளம் நோக்கி வந்த பேருந்து அதே திசையில் புதுக்குளம் பாடசாலைக்கு துவிச்சக்கர வண்டியில் சென்ற மாணவனை மோதித்தள்ளியது. காயமடைந்த மாணவன் வவுனியா பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.