ஜனாதிபதித் தேர்தலில் ரணிலே பொது வேட்பாளர்: ரவி தெரிவிப்பு!

0
159

தேசிய இணக்கப்பாட்டு அரசொன்றை அமைப்பதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
2024 ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
‘ஒழுக்கமும் சட்டமும் இன்றி ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கான இறுதிச் சந்தர்ப்பம் இதுவாகும்.
எனவே மக்கள் இந்த நேரத்தில் மிகவும் புத்திசாலித்தனமாகவும், பொறுப்புடனும் செயற்பட வேண்டும்.
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கும் மக்களைப் பலப்படுத்துவதற்கும் அன்றி நாட்டை அழிப்பதற்காகவே எதிர்க் கட்சிகளும் சில தொழிற்சங்கங்களும் செயற்படுகின்றன. அரசியல் அறியாமை காரணமாகவே பல அரசாங்கங்கள் தோல்வியை சந்திக்கின்றன’ என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.