டயனா கமகேவை கைதுசெய்ய உத்தரவிடுவதா இல்லையா ? : தீர்மானம் 24 ஆம் திகதி!

0
141

டயனா குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றங்களுக்காக இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்படுமா? இல்லையா? என்பது தொடர்பான தீர்ப்பு ஏப்ரல் 24 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் இன்று உத்தரவிட்டார்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 32ஆவது பிரிவின் கீழ் டயானா கமகேவை கைது செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு மனுதாரர் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.