

வவுனியா – மன்னார் வீதியில், இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக, நெளுக்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வேப்பங்குளம் பகுதி எரிபொருள் நிரப்பு நிலையத்தில், எரிபொருள் நிரப்பிய டிப்பர் வாகனம் ஒன்று, வீதியில் ஏற முற்பட்ட போது, நகரில் இருந்து வேப்பங்குளம் 8 ஆம் ஒழுங்கையில் திரும்ப முற்பட்ட மோட்டர் சைக்கிளுடன் மோதி விபத்திற்குள்ளானது.
குறித்த விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் படுகாயமடைந்த நிலையில், வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், நெளுக்குளம் பொலிசார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.