தந்தை செல்வா நினைவுச் சதுக்கம் பகுதியில் சிரமதானம்

0
24

இலங்கை தமிழரசு கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவினுடைய நினைவுச் சதுக்கம் அமைந்துள்ள பகுதியில் இன்று காலை சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.

கட்சியின் ஏற்பாட்டில் கட்சியின் பதில் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தலைமையில் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.

சிரமதான பணியில் தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்கள், இளைஞர் அணி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், தொண்டர்கள் எனப்பலர் ஈடுபட்டிருந்தனர்.

அண்மையில் நிலவிய காற்று மழையுடன் கூடிய காலநிலைமை காரணமாக தந்தை செல்வாவின் நினைவுச் சதுக்கம் அமைந்துள்ள பகுதிகள் புற்கள் வளர்ந்து பற்றைக் காடாக காட்சியளித்த நிலையில், சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.