தமிழரசுகட்சியின் மத்திய செயற்குழு அடுத்த வாரம் அவசரமாக கூடுகிறது!

0
153

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் அடுத்த வாரம் 11, 12 ம் திகதியில் அவசரமாக கூட்டப்படவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்

கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கட்சிகளுக்கிடையே பிளவுபடுத்தக்கூடியவாறான கருத்துக்களை முன் வைக்கிறார்கள் நீங்கள் தமிழரசு கட்சியின் தலைவர் என்ற ரீதியில் ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறீர்கள் என பலர் என்னிடம் வினவி இருக்கின்றார்கள்,

எனவே கட்சியின் தலைவர் என்ற ரீதியில் அவ்வாறு கருத்துக்களை முன்வைத்தவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானித்திருக்கின்றேன்

அந்த வகையில் எதிர்வரும் 11 ,12 ம் திகதிகளில் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூடி கட்சியில் எந்த பதவியில் இருந்தாலும் கட்சிகளுக்கிடையில் பிளவை ஏற்படுத்தும் முகமாக கருத்துக்களை முன்வைத்தவர்களுக்கு எதிராக ஒழுங்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு நான் தீர்மானித்திருக்கின்றேன் கட்சியின் ஒழுங்கு விதிகளுக்கு அமைய அது செயற்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.