![](https://eelanadu.lk/wp-content/uploads/2023/01/தமிழ்-அரசுக்-கட்சியின்-மாந்தை-கிழக்கு-வேட்பாளர்கள்-அறிமுகம்-1-1024x576.png)
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச சபைகளில் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வேட்பாளர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களை அறிமுகம் செய்யும் பொதுக்கூட்டம் மல்லாவியில் இடம்பெற்றது. வேட்பாளர் அறிமுக நிகழ்வில் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா, வடமாகாண சபை முன்னாள் பிரதி அவைத் தலைவர் எஸ்.வல்லிபுரம், துணுக்காய் பிரதேச சபை தவிசாளர் அ.அமர்தலிங்கம் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதன் மற்றும் துணுக்காய், மாந்தை கிழக்கு பிரதேச சபைகளில் போட்டியிடுகின்ற இலங்கை தமிழ் அரசுக் கட்சி வேட்பாளர்கள், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.