தமிழ் மக்களுக்கு உரிமையும் அபிவிருத்தியும் அவசியம் – சாணக்கியன்

0
199

அபிவிருத்தி என்ற போர்வையில் காணிகள் பறிபோவதற்கு நாங்கள் அனுமதி வழங்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்லர். ஆனால், எங்களுக்கு உரிமையும், அபிவிருத்தியும் வேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம் எனவும் தெரிவித்தார்.

களுவாஞ்சிக்குடி பிரதேச சபை அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.