தமிழ் மக்கள் செந்த நிலங்களில் வாழ்வதற்கான உரிமையை அரசு வழங்க வேண்டும்: சிறிதரன்

0
312

இராணுவம் பறித்து வைத்துள்ள காணிகளை விடுவித்து, தமிழ் மக்கள் தமது செந்த நிலங்களில் வாழ்வதற்கான உரிமையை வழங்கினால் மட்டுமே நீதியும் நியாயமும் நாட்டில் கிடைக்கும் என நாடாளுமன்ற உறப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் சிறிதரன் எம்.பி இதனைத் தெரிவித்துள்ளார்.

கொக்குதொடுவாயில் பல பெண் போராளிகளின் உடல்கள் எனக் கூறப்படும் பல மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மண்டைதீவு தூமையார் ஆலயக் கிணற்றை துப்புரவு செய்தால் சுமார் 60க்கும் மேற்பட்ட இளைஞர்களின் உடல்களை தோண்டி எடுக்க முடியும் எனவும் சபையில் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இதன் காரணமாகவே இராணுவத்தினர் அந்த இடத்தில் உள்ள மக்களின் காணிகளை பறிக்க முயற்சிக்கின்றார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.