தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணிக் கூட்டம், அக் கட்சியின் மகளிரணி செயலாளர் சுசிகலா அருள்தாஸ்
தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் மற்றும் மாவட்ட ரீதியான பெண் பிரதிநிதிகள், பிரதேச ரீதியான பெண் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களுக்கான பிரதிநித்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில், பெண்களுக்கான வட்டாரங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிரணி கோரிக்கை விடுத்துள்ளது.