தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில், கொக்கட்டிச்சோலை நினைவேந்தல்

0
232

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலையின் 36வது ஆண்டு நினைவுதினம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகமுமான கோவிந்தம் கருணாகரம் தலைமையில் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.
28-01-1987ம் ஆண்டு மற்றும் 12-06-1991ம் ஆண்டு காலப்பகுதியில், இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் மகிழடித்தீவு இறால் பண்ணை மற்றும் கொக்கட்டிச்சோலை ஆகிய பகுதிகளில் 239 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
படுகொலை செய்யப்பட்டவர்களில், சிறுவர்கள், பெண்கள் மற்றும் முதியவர்களும் உள்ளடங்குகின்றனர்.
மகிழடித்தீவு சந்தியில் அமைக்கப்பட்டுள்ள படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுத்தூபியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
ஈகச்சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டு உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்தி வேண்டி பிரார்த்தனைகள் இடம்பெற்றன.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் பிறிதொரு நினைவேந்தல், கொக்கட்டிச்சோலை படுகொலையில் உயிரிழந்தவர்களின் நினைவாக, மகிழடித்தீவில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியில் இடம்பெற்றது.