தரநிலை சட்டமூலம் பாராளுமன்றத்தில் விரைவில் சமர்ப்பிக்கப்படும் – விஜயதாச ராஜபக்ஷ

0
152

உத்தேச பாராளுமன்ற தர நிலை சட்டமூலம் அமுல்படுத்தப்பட்டவுடன் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தகுதியற்றவர்களை நீக்க முடியும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விரைவில் தரநிலை சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கு முன்பாக பிரதமர் தினேஷ் குணவர்தன இது குறித்து கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கட்சித் தலைவர்களுடன் இடம்பெறும் கலந்துரையாடலின் போது குறித்த சட்டமூலத்துக்கு தேவையான திருத்தங்களை பிரதமர் மேற்கொள்வார் எனவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.