களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவு களுத்துறை, ஹீனடியங்கல பகுதியில் உள்ள வீடொன்று திடீரென தீப்பற்றியுள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை, ஹீனடியங்கல, கொச்சிகொட்டுவ பகுதியில் பல வீடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள ஒரு மூடியுள்ள வீட்டில் தீப்பிடித்து எரிந்துள்ளது.
களுத்துறை மாநகர சபையின் தலைமை தீயணைப்பு அதிகாரி, தீயணைப்பு படையினருடன் இணைந்து, இரண்டு தீயணைப்பு வாகனங்களை வரவழைத்து, அப்பகுதி மக்களின் உதவியுடன், சுற்றியுள்ள வீடுகளுக்கு தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
தீ விபத்தில் வீடு பலத்த சேதமடைந்துள்ளது, மேலும் சொத்து சேதம் குறித்து மதிப்பிடப்படவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.