நுவரெலியா பொரலாந்த வஜிரபுர பிரதேசத்தில் உள்ள தனி வீடொன்று தீப்பிடித்து முற்றாக தீக்கிரையாகியுள்ளது.குறித்த தீ விபத்தானது இன்று அதிகாலையில் ஏற்பட்டுள்ளதாக வீட்டின் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வீடு திடீரென தீப்பிடித்து எரிவதனை அவதானித்த அயலவர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த போதிலும் வீட்டில் இருந்த பெறுமதியான பொருட்களும்இ முக்கிய ஆவணங்களும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
தீ விபத்தில் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை எனவும் தீ அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களை கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலாளரினால் தற்காலிகமாக தங்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தடயவியல் பொலிஸார் சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்த போது வீட்டில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாக தீப்பற்றியுள்ளதாக உறுதிசெய்தனர்.சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.