திருகோணமலை கிண்ணியா பிரதேச செயலகத்தால் இரத்ததான முகாம்

0
7

திருகோணமலை கிண்ணியா பிரதேச செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம் நேற்றைய தினம் கிண்ணியா பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் எம்.எச்.எம் கனி தலைமையில் நடைபெற்றது.
கிண்ணியா மற்றும் திருகோணமலை பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள, இரத்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


கிண்ணியா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவு ஊழியர்கள், திருகோணமலை பொது வைத்தியசாலையின் இரத்தவங்கி பிரிவு ஊழியர்கள் இணைந்து, நிகழ்வினை நடாத்தினர். கிண்ணியா பிரதேச செயலக ஊழியர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு, இரத்ததானம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.