அம்பாரை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள திருக்கோவில் பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட 131 குடும்பங்களுககு அரசினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் கொவிட் 19 தொற்றின் மூன்றாம் அலையின் கீழ் சந்தேகத்தின் பேரில் திருக்கோவில் பிரதேசத்தில் வீடுகளில் இதுவரை சுமார் 131 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு தனிமைபடுத்தப்பட்டுள்ள 131குடும்பங்களுக்கும் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் ஆலோசனைகளுக்கு அமைவாக 5ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் திருக்கோவில் பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகளை திருக்கோவில் பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் கிராம உத்தியோகத்தர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் இணைந்து வழங்கி வைத்துள்ளனர்.