தெற்கில் பாரிய விபத்து: 26 வாகனங்கள் சேதம்!

0
259

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தொடங்கொட நுழைவாயிலுக்கு அருகில் நேற்று இரவு இடம்பெற்ற பல விபத்துக்களில் 26 வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த வாகனங்கள் 32 முதல் 35 கிலோமீற்றர் வரையில் இடம்பெற்ற 06 விபத்துக்களால் இந்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெற்கு அதிவேக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாகனங்களுக்கு இடையே இடைவெளி விட்டு பயணிக்காத காரணத்தால் இந்த விபத்துகள் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.